மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை
21-Oct-2024
கரூர், நவ. 1-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கரூர் உழவர் சந்தையில், 32,165 கிலோ காய்கறி, பழங்கள் இரண்டு நாட்களில் விற்றுள்ளது.கரூர் உழவர் சந்தையில், நேற்று முன்தினம் காலை, நேற்று காலை ஆகிய இரண்டு தினங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. தக்காளி கிலோ, 40 ரூபாய், பெல்லாரி வெங்காயம், 65, சின்ன வெங்காயம், 60, வெண்டைக்காய், 30, அவரை, 100, புடலை, 30, பீர்க்கங்காய், 30, முள்ளங்கி, 40, பாகற்காய், 45, முருங்கை, 40, கத்தரிக்காய், 40, பச்ச மிளகாய், 50, கேரட், 65, உருளைகிழங்கு, 60 ரூபாய்க்கு விற்றது.நேற்று முன்தினம், 18 ஆயிரத்து, 800 கிலோ காய்கறி, பழங்கள் உழவர் சந்தையில் விற்பனையானது. இதன் மதிப்பு, எட்டு லட்சத்து, 73 ஆயிரத்து, 425 ரூபாய். 3,133 பேர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி சென்றனர்.நேற்று, 13 ஆயிரத்து, 365 கிலோ காய்கறி, பழங்கள் உழவர் சந்தையில் விற்பனையானது. இதன் மதிப்பு ஆறு லட்சத்து, 40 ஆயிரத்து, 800 ரூபாய். 2,228 பேர் காய்கறிகளை வாங்கி சென்றனர். தீபாவளி முன்னிட்டு, இரண்டு நாட்களில் மொத்தம், 32 ஆயிரத்து, 165 கிலோ காய்கறி, பழங்கள் உழவர் சந்தையில் விற்பனையானது. இதன் மதிப்பு, 15 லட்சத்து, 14 ஆயிரத்து, 225 ரூபாய்.
21-Oct-2024