உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில், இரு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் கலையரசன், 28; பாலத்துறையில் உள்ள, பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த, 26ல் இரவு பேக்கரிக்கு வந்த, கரூரை சேர்ந்த எஸ். கலையரசன், ேஷக் தாவுத், 25; ஆகியோர், பேக்கரி ஊழியர் கலையரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2,200 ரூபாயை பறித்து சென்றனர். கலையரசன் கொடுத்த புகாரின்படி, பணம் பறித்த எஸ்.கலையரசன், ேஷக் தாவுத் ஆகிய, இரண்டு பேரை, வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.* கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம், 37; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 2ல் ஒத்தமாந்துரையில் உள்ள, டீ கடை ஒன்றில் அமர்ந்திருந்தார். அப்போது, டீ கடைக்கு வந்த, சின்னதாராபுரம் வடக்கு குடித்தெருவை சேர்ந்த யேசுதாஸ், 34; கத்தியை காட்டி மிரட்டி, முருகானந்தத்திடம் இருந்து, 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். முருகானந்தம் கொடுத்த புகாரின் படி, சின்னதாராபுரம் போலீசார், யேசுதாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை