உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட், லெனினிஸிட் சார்பில், மாவட்ட செயலர் ராமச்சந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு, வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க கோரி, நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்துக்கு அனுமதி இல்லை என கூறி, ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட தலைவர் செந்தில் குமார், செயலர் பால்ராஜ் உள்பட, 30 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி