கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் 3ம் நாள் ராப்பத்து உற்சவம்
கரூர்: கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று மூன்றாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.கரூரில் பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9 இரவு மூலவர் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று, மூன்றாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது. அதில், வெண்ணை-தாழி கிருஷ்ணன் வேடத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்-டனர்.