மேலும் செய்திகள்
முன் விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை
03-Oct-2025
குளித்தலை, குளித்தலையில், ஆட்டோ டிரைவர் கார்த்திக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் நான்கு பேர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.நேற்று முன்தினம் அதிகாலை, பெரியபனையூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக், 29, துாங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்களால், முன் பகையால் ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று, குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதி மன்றம் எண்-2ல், நீதிபதி சசிகலா முன் திருச்சி மாவட்டம், இனாம்புலியூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், 23, குளித்தலை அடுத்த நெய்தலுார் காலனியை சேர்ந்த ஆனந்தகுமார், 28, திருச்சி மாவட்டம் போதாவூர் வடக்கு மேட்டை சேர்ந்த மனித வாசு, 19, மகாதேவன், 20, ஆகிய நான்கு பேர் சரண் அடைந்தனர்.இவர்களை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், நங்கவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார், வாகனத்தில் ஏற்றி சென்று, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஆட்டோ டிரைவர் கார்த்திக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 9 பேர் பிடிபட்டு சிறையில் உள்ளனர்.
03-Oct-2025