உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொள்முதல் நிலையங்கள் மூலம் 4,187 டன் நெல் வாங்கப்பட்டுள்ளது

கொள்முதல் நிலையங்கள் மூலம் 4,187 டன் நெல் வாங்கப்பட்டுள்ளது

கரூர்: கரூரில், நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 4,187 டன் நெல் வாங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தெரிவித்தார்.கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், வீரராக்கியத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறிய-தாவது:கரூர் மாவட்டத்தில், காரீப் கொள்முதல் பருவம் விவசாயிகள் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள், 18 இடங்களில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், 12 இடங்களில் கொள்-முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள ஆறு இடங்-களில் விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பிப்., 5 வரை, சன்ன ரகம் நெல், 4,097.28 மெ.டன், பொது ரகம் 90.48 மெ.டன் என மொத்தம், 4,187.76 மெ.டன் நெல் விவசாயிகளிடமி-ருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 8.17 கோடி ரூபாய்- சம்பந்தப்-பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.சன்ன ரகம் நெல் (கிரேடு ஏ) குவிண்டால் ஒன்றுக்கு, 2,450 ரூபாய், பொது ரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு, 2,405 ரூபாய் என கொள்முதல் செய்யப்படுகிறது. வீரராக்கியம் நெல் கொள்-முதல் நிலையத்தில் நெல் தரம், நெல் கொள்முதல் பதிவேடு, நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் விபரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல்லை, உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்ப அலுவ-லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பதம், 17 சதவீதம் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.இணை இயக்குனர் (வேளாண்) சிவானந்தம், மண்டல மேலாளர் (நுகர்பொருள் வாணிப கழகம்) முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ