மேலும் செய்திகள்
குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை
26-Sep-2025
கரூர் : மாவட்டத்தில் இன்று நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 7,369 பேர் எழுதுகின்றனர் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, 27 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று( 28ம்தேதி) நடக்கிறது. அதில், 7,369 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தேர்வர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 9:00 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. தேர்வர்கள் கருப்பு பந்து முனை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் தங்கள் கையொப்பத்தை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் இட வேண்டும்.தேர்வு முடிவடைந்த பின், தேர்வர்களில் இடது கை பெருவிரல் ரேகை பதிவை விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இட வேண்டும். மேலும் தங்கள் புகைப்படம் அடையாளத்துக்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். பென்சில், அழிப்பான்கள், மொபைல், கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2025