உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிலப்பிரச்னையில் கொலை 9 பேர் குண்டாஸில் கைது

நிலப்பிரச்னையில் கொலை 9 பேர் குண்டாஸில் கைது

கரூர், நிலப்பிரச்சனையில் ஒருவரை வெட்டி கொன்ற வழக்கில், 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கரூர்அருகில் வாங்கல்ஈ.வே.ரா., தெருவை சேர்ந்த ராணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவது தொடர்பாக மணிவாசகம், வெங்கடேஷ்என்பவர் இடையே நிலப்பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை, 13ல் மணிவாசகம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெங்கடேஷ், கவியரசன், விவேக், மணிகண்டன், சந்திரபிரகாஷ், கிருஷ்ணா, நிஜாமுதீன், செந்தமிழ், செந்தில்ராஜா ஆகிய, 9 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.இவர்களை, குண்டர்தடுப்பு காவல்சட்டத்தில்கைது செய்ய, கரூர்எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, 9 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். பின், திருச்சி மத்திய சிறையில் உள்ள, 9 பேரிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, வாங்கல் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை