மேலும் செய்திகள்
குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டுனர்கள் அவதி
20-Mar-2025
கரூர்:சேதமான சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் பாலமலையில் முருகன் கோவில், மருதகாளியம்மன், பெருமாள் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இதில், பவித்திரத்தில் இருந்து பாலமலைக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், அந்த சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லை.இதனால், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் செல்வோர் சிரமப்படுகின்றனர். உடனடியாக சாலையை சீரமைக்க, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Mar-2025