மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
22-Oct-2024
பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
31-Oct-2024
அரவக்குறிச்சியில் இருந்துகுஜிலியம்பாறைக்கு பஸ் தேவைஅரவக்குறிச்சி, நவ. 7-அரவக்குறிச்சியில் இருந்து, குஜிலியம்பாறைக்கு பஸ் இயக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.அரவக்குறிச்சி யில் இருந்து, குஜிலியம்பாறைக்கு அரசு அலுவலர்கள், கூலித்தொழிலாளிகள், மாணவ, மாணவிகள் பணி நிமித்தமாக தினமும் சென்று வருகின்றனர். ஆனால், அரவக்குறிச்சியில் இருந்து குஜிலியம்பாறை செல்ல வேண்டும் என்றால், பாளையம் சென்று பின்பு வேறு பஸ்களில் ஏறி, செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பாளையம் செல்வதற்கு அடிக்கடி பஸ் வசதி இல்லை என்பதால், 30 கி.மீ., தொலைவில் உள்ள கரூர் சென்று, மீண்டும் கரூரில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள குஜிலியம்பாறை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால் ஏழை எளிய மக்களுக்கு, இரு மடங்கு செலவு ஏற்படுவதுடன், ஒன்றரை மணி நேரம் கால விரயமும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்து கழகம் காலை, மாலை நேரங்களில் குஜிலியம்பாறைக்கு எளிதாக செல்லும் வகையில், பஸ்களை அரவக்குறிச்சியில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Oct-2024
31-Oct-2024