போலீஸ் ஏட்டுவை ஏமாற்றிய தம்பதியர் மீது வழக்குப்பதிவு
போலீஸ் ஏட்டுவை ஏமாற்றியதம்பதியர் மீது வழக்குப்பதிவுகரூர், நவ. 19-கரூர் அருகே, குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி, போலீஸ் ஏட்டுவை ஏமாற்றிய, கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை தென்றல் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 43; போலீஸ் ஏட்டு. தற்போது, தமிழ் செல்வன் சஸ்பெண்டில் உள்ளார். இந்நிலையில் கடந்த அக்., 8ல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறிய, மஹாராஷ்டிரா மாநிலம், பர்பானி பகுதியை சேர்ந்த நந்து சிட்னி, 50, அவரது மனைவி சந்திரகலா, 45, ஆகியோரிடம், ஐந்து லட்ச ரூபாயை போலீஸ் ஏட்டு தமிழ் செல்வன் கொடுத்துள்ளார்.ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் தங்கத்தை நந்து சிட்னி வாங்கி தரவில்லை. இதனால், போலீஸ் ஏட்டு தமிழ்செல்வன், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்து சிட்னி, அவரது மனைவிசந்திரகலா ஆகியோரை தேடி வருகின்றனர்.