உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மது விற்ற பெண் மீது வழக்கு பதிவு

மது விற்ற பெண் மீது வழக்கு பதிவு

அரவக்குறிச்சி : க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விஸ்வநாதபுரி பகுதியில் க.பரமத்தி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விஸ்வநாதபுரி அருகே அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் மனைவி சித்ரா, 48, என்பவர் அவரது வீட்டின் அருகாமையில், சட்டவிரோதமாக மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விற்பனையாக வைத்திருந்த, 1,500 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சித்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை