உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி ஆபீசில் வைக்கப்பட்ட தமிழ் வாழ்க போர்டில் எரியாத விளக்கு

கரூர் மாநகராட்சி ஆபீசில் வைக்கப்பட்ட தமிழ் வாழ்க போர்டில் எரியாத விளக்கு

கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள, 'தமிழ் வாழ்க' போர்டில் விளக்குகள் எரியாமல் உள்ளன. கடந்த, 2006-11 ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் கிராம பஞ்., அலுவலகங்களில், 'தமிழ் வாழ்க' என்ற போர்டு வைக்க வேண்டும் என, உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு, அலுவலகங்களில்,'தமிழ் வாழ்க' என்ற போர்டு வைக்கப்பட்டது.இரவு நேரத்திலும், தமிழ் வாழ்க என பளிச் என தெரியும் வகையில் போர்டில் விளக்கு அமைக்கப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டது. கரூர் மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள, 'தமிழ் வாழ்க' போர்டில் பல மாதங்களாக விளக்கு எரியவில்லை.கரூர் மாநகராட்சி மேயராக தி.மு.க., வை சேர்ந்த கவிதாவும், துணை மேயராக தாரணி சரவணனும் உள்ளனர். மேலும், தி.மு.க., கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள போர்டில் விளக்கு எரியாமல் உள்ளதை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ