உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டுகோள்

குளித்தலை நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டுகோள்

குளித்தலை: குளித்தலை பகுதியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குளித்தலை நகராட்சி பகுதியில், கூட்டம் கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த வெறிநாய்களால், குழந்தைகள், முதியோர் உயிர் பயத்தில் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து, நகராட்சி கமிஷனர், நகராட்சி தலைவர் ஆகியோர்களிடம், பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணியளவில் குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகே கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிந்தன. மேலும், சாலையின் குறுக்கே சண்டையிட்டு வந்ததால், டூவீலரில் சென்ற பொதுமக்கள் தடுமாறினர். எனவே, நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை