மேலும் செய்திகள்
டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி
30-Sep-2024
பைக் மீது கார் மோதிவாலிபர் பரிதாப பலிகரூர், அக். 16-கரூர் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், குளித்தலை குன்ன கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன், 27; இவர் நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில், கரூர்-திருச்சி சாலை காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஈரோடு மாவட்டம், நம்பியூரை சேர்ந்த மவுலீஸ்வரன், 25; என்பவர் ஓட்டி சென்ற மகேந்திரா கார், கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த கோபால கிருஷ்ணன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Sep-2024