உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை பகுதி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

குளித்தலை பகுதி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

குளித்தலை: குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில், 259 மாணவிகள் தேர்வு எழுதினர். 240 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 93 சதவீதம். குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 158 மாணவர்கள் தேர்வு எழுதி, 138 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 87 சதவீதம்.ஆலத்துார், அரசு மேல்நிலைப் பள்ளியில் 33 பேர் தேர்வு எழுதி, 31 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 94 சதவீதம். இனுங்கூர், அரசு உயர் நிலைப்பள்ளியில், 51 பேர் தேர்வு எழுதி, 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது, 98 சதவீதம். வடசேரி அரசு உயர்நிலைப் பள்ளியில், 53 பேர் தேர்வு எழுதி, 52 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 98 சதவீதம்.ஆர்.டி. மலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 59 மாணவர்கள் தேர்வு எழுதி, 55 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 93 சதவீதம். தோகைமலை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 174 பேர் தேர்வு எழுதி, 147 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 84 சதவீதம். அய்யர்மலை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 101 பேர் தேர்வு எழுதி, 87 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 86 சதவீதம்.நச்சலுார், அரசு உயர்நிலைப் பள்ளியில் 75 பேர் தேர்வு எழுதி, 68 பேர் வெற்றி பெற்றனர். இது, 91 சதவீதமாகும். நெய்தலுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், 70 மாணவர்கள் தேர்வு எழுதினர். 59 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84 சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ