சேதமான சுகாதார பூங்கா சீரமைக்க நடவடிக்கை தேவை
கரூர்: பராமரிப்பின்றி உள்ள கரூர் தான்தோன்றிமலை சுகாதார மாதிரி பூங்கா வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கரூர், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம் அருகே, சில ஆண்டுகளுக்கு முன் சுகாதார பூங்கா அமைக்கப்பட்டது. அதில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்-படும் தீமைகள், வீட்டில் கழிப்பிடம் கட்ட வேண்டியதன் அவ-சியம்; இந்தியாவில் பயன்படுத்தப்படும் கழிப்பிட வகைகள் குறித்த தகவல்கள்; மாடல்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவியரை அங்கு அழைத்துச்சென்று, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில், சரியான பராமரிப்பில்லாததால், சுகாதார பூங்கா பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மாடல் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.இதனை சீரமைத்து அனைவரும் வந்து பார்வையிட்டு செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.