உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நடிகர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி

நடிகர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி

கரூர்: ''நடிகர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உலகளவில் எந்த நாட்டிலும் கள் தடையில்லாத போது, தமிழகத்தில் மட்டும் கள் விற்பனைக்கு எதற்கு தடை போட வேண்டும். தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்த-கத்தை கையில் வைத்துக் கொண்டு பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47வது பிரிவில் கள் ஒரு உணவு பொருள் என்று சொல்லி இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களா.கள் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் வாதாடி வெற்றி பெற்று விட்டால், அவர்க-ளுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன், வாதிட வாருங்கள் என அழைப்பு விடுக்கிறேன். 2025 ஜன., 21ல், கள் இறக்கி சந்-தைப்படுத்தும் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும்.நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கிறேன். தமிழகத்தில் அண்ணாதுரை முதல் தற்போது உள்ள துணை முதல்வர் வரை, அனைவரும் சினிமாவில் தொடர்புடையவர்கள் தான். யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய். அவர் தொடங்கிய த.வெ.க., ஆட்சிக்கு வரலாம், வரா-மலும் போகலாம். ஆனால், விஜய்க்கு அரசியல் பற்றி புரிதல் இல்லை.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !