உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குகை வழிப்பாதையில் கூடுதல் லைட் தேவை

குகை வழிப்பாதையில் கூடுதல் லைட் தேவை

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்ககல்பட்டி பகு-தியில் இருந்து, பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பிடமங்கலம், சேங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் பகுதியில், கருர்--திண்டுக்கல் ரயில்வே பாதை செல்வதால் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்-ளது.இந்த குகை வழிப்பாதையின் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானோர், இரண்டு சக்கர வாகனங்-களில் சென்று வருகின்றனர். அவ்வப்போது சில பஸ்களும் குகை வழிப்பாதையின் வழியாக செல்கிறது. போதிய வெளிச்சம் இல்லாமல், இரவு நேரங்களில் குகை வழிப்பாதையை கடந்து செல்ல சிரமப்பட்டு வரு-கின்றனர்.எனவே, அனைவரின் நலன் கருதி குகை வழிப்-பாதை இருபுறமும் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ