பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அ.தி.மு.க.,மரியாதை
கரூர், கரூரில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, மாவட்ட இணை செயலர் மல்லிகா, கரூர் மேற்கு ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.