மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபட வேண்டும்: தங்கமணி பேச்சு
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையபாடுபட வேண்டும்: தங்கமணி பேச்சுகுளித்தலை, அக். 24-அய்யர்மலையில் நேற்று காலை குளித்தலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., சசிகலா ரவி, ஒன்றிய செயலர் விஜயவினாயகம், மாவட்ட செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் சிவபதி பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நாம் துவண்டு விடக்கூடாது; தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். வீட்டு வரி, சொத்து வரி ஏற்றாமல் சிறப்பாக செயல்பட்டது இ.பி.எஸ்., அரசுதான். ஏழை எளிய மக்கள், பட்டியல் இன மக்கள் அனைவரும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நினைவாக்கும் வகையில், 7.5 சதவீதம் வழங்கப்பட்டு ஆண்டுக்கு, 600 மாணவ, மாணவிகள் மருத்துவராகி வருகின்றனர். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய அனைவரும் கட்சி பணியாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.இதேபோல் தோகைமலை மேற்கு ஒன்றியம் சார்பில், தோகைமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலர் ரெங்கசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சிவபதி பங்கேற்று கட்சி செயல்பாடு குறித்து பேசினர்.அய்யர்மலையில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலர் வக்கீல் இளங்குமரன் தலைமை வகித்தார். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.