மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
கரூர், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆண்டுக்கு, 4.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், வேலை அட்டை பெற்றுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்தி, 700 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் அஞ்சலி தேவி, செயலாளர் தங்கவேல், துணை செயலாளர் ஆண்டியப்பன், பொருளாளர் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Jun-2025