உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி ஏஜென்ட்கள் கூட்டம்

அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி ஏஜென்ட்கள் கூட்டம்

கரூர், தோகைமலை கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், குளித்தலை சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடி ஏஜென்ட்கள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் தோகைமலையில் நடந்தது.அதில், சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி ஏஜென்ட்களின் பணிகள், கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் துண்டு பிரசுரமாக வழங்குதல், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க., ஆட்சி கால திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்தல் ஆகியவை குறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், கருணாகரன், ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ