மேலும் செய்திகள்
54வது ஆண்டு துவக்க விழா: அ.தி.மு.க., கொண்டாட்டம்
18-Oct-2025
திருச்சாப்பூரில் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகம்
02-Oct-2025
குளித்தலை, குளித்தலை சட்டசபை தொகுதி சார்பில், வளையப்பட்டியில் மறைந்த முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் பண்ணை தோட்டத்தில், அ.தி.மு.க., 54ம் ஆண்டு தொடக்க நாளை ஒட்டி, நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை, இனிப்பு வழங்கப்பட்டது.குளித்தலை ஒன்றிய செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். முன்னதாக மறைந்த நிறுவனர் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குளித்தலை, தோகைமலை ஒன்றியம். மருதுார், நங்கவரம் பேரூர், குளித்தலை நகராட்சி உள்ளிட்ட அனைத்து கிளை வார்டுகளில், தலா ஐந்து பேருக்கு வேட்டி, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய பையை, ஒன்றிய செயலர் கருணாகரன் வழங்கினார்.இதேபோல் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.,வினருக்கு முன்னாள் மாவட்ட பஞ்.. குழு தலைவரும், மாவட்ட பொருளாளருமான கண்ணதாசன் தலைமையில் நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
18-Oct-2025
02-Oct-2025