உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு

கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கணினி சுழற்சிமுறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார்.பின், அவர் கூறியதாவது: லோக்சபா தொகுதியில், 1,670 ஓட்டுச்சாவடி மையங்களில், 9,073 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தாங்கள் அளித்த ஓட்டினை சரிபார்க்கும் இயந்திரம் தயாராக உள்ளது. இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்காக கணினி சுழற்சிமுறை தேர்வு செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அலுவலர் இளங்கோ, தேர்தல் தாசில்தார் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ