முன்னாள் மாணவர் சந்திப்பு
கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 1988-ல் பிளஸ் 2 வகுப்பில் பயின்ற மாணவ, மாணவியர், 36 ஆண்டுகள் கழித்து பயின்ற அனைவரும் சந்தித்து பழைய நினை-வுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மணி, முனியப்பன், அய்யா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி, அவரது வாழ்த்துகளை பெற்றனர். விழாவிற்கு வருகைபுரிந்த அனைவருக்கும் நினைவு சுழற்கே-டயம் வழங்கி சிறப்பித்து மாணவ, மாணவியர் நினைவாக பள்-ளிக்கு மேசை நாற்காலி அன்பளிப்பு வழங்கினர்.