மேலும் செய்திகள்
புரட்டாசி மாத பவுர்ணமி கோவில்களில் கோலாகலம்
17-Oct-2024
கரூர், நவ. 2-புன்னம் சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது.அதை தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் அலங்கார பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், கரூரில் மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், தான்தோன்றி மலை பகவதி அம்மன் கோவில்களிலும், பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக, அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.
17-Oct-2024