உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வக்கீல்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

குளித்தலை : குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகளை, கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து, வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல், குடும்ப நல வழக்குகளை கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை கண்டித்து கடந்த, 15 முதல், 18 வரை குளித்தலை, கிருஷ்ணாராயபுரம் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என, வழக்கறிஞர்கள் சங்க அவசர பொது உறுப்பினர் கூட்டத்தில் கடந்த, 12ல் முடிவு செய்யப்பட்டது.மேலும், குடும்ப நல வழக்காளிகள் பாதிப்பை தடுக்கும் விதமாக, வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, குளித்தலை நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள், சங்க பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ