உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவி யாளர்கள் சங்கம் சார்பில், பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும், அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும், பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்ச ரூபாய், உதவியாளர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் பத்மா தேவி, அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை