உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பசுபதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

பசுபதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆண்டுதோறும் ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில், சிவன் கோவில்களில் நடராஜருக்கு, ஆனி திருமஞ்சன விழா நடப்பது வழக்கம். அதையொட்டி நேற்று காலை, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நடராஜர், சிவகாமி அம்பாள், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், அப்பர், காரைக்கால் அம்மையார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பிறகு, மாலை நடராஜர் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். * நன்செய் புகழூர் அக்ரஹாரம் அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்கா தேவி சன்னதியில், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ