பயிர்களுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
பயிர்களுக்கு பிரதமர் காப்பீடுதிட்டத்தில் விண்ணப்பிக்கலாம்கரூர், நவ. 28-வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:விவசாயிகள் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது, எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது. அத்தகைய காலகட்டங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம்.கரூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்யலாம். இதில், ஹெக்டருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு, 1,768 ரூபாய், வெங்காயத்திற்கு, 2,060 ரூபாய், மிளகாய்க்கு, 1,220 ரூபாய் என பிரீமியம் தொகையை வரும் 2025 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். வாழைக்கு, 3,460 ரூபாய், மரவள்ளிக்கு, 4,082 ரூபாய் 2025 பிப்., 28க்குள்ளும் பிரீமியம் செலுத்த வேண்டும்.இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்களுடன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ.-சேவை மையங்களில் செலுத்தலாம்.இவ்வாறு, கூறியுள்ளார்.