மேலும் செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
08-Aug-2025
கரூர் ராகவேந்திரர் சுவாமி கோவிலில், ஆராதனை மஹோத்ஸவ விழா நடந்தது.கரூர், ராகவேந்திரர் சுவாமி கோவிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழா கடந்த, 10ல் துவங்கியது. நேற்று முன்தினம் கனகாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், மகா மங்களாரத்தி, தீர்த்தபிரசாதம் நடந்தது. நேற்று, மங்கள இசையுடன் வைபவம் துவங்கியது.பால், தயிர், தேன், நெய், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய திரவியங்களால் ராகவேந்திரருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பின் அலங்கார பூஜை, மலர் அர்ச்சனை, மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு, 7:00 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் ராகவேந்திரரை தரிசனம் செய்தனர். இன்று உத்தர ஆராதனை விழா நடக்கிறது.
08-Aug-2025