உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், க.பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.அதில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம் பணிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள், அரவக்குறிச்சி தொகு-திக்கு கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அறிவித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகியவை குறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், மாநில அமைப்பு செயலர் சின்னசாமி, ஒன்றிய செய-லர்கள் கமல கண்ணன், கலையரசன், மார்க்கண்டேயன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அ.தி.மு.க., நிர்-வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி