உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்கள் வட்டார கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு

அரவக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்கள் வட்டார கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாண-வர்கள், குறுவள மைய போட்டியில் வெற்றி பெற்று, வட்டார கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில், கலைத்திருவிழா போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டு போட்டிகள், குறுவள மையத்திற்கு வீடியோவாக அனுப்பப்பட்டது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டு நேர-டியாக குறுவள மைய போட்டிகள் நடந்தன. இதில், அரவக்கு-றிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் வகுப்பு மாணவர் முகமது ஷாரிக், மாறுவேட போட்டியில் முதலிடம், தமிழ் மழலையர் பாடல் ஒப்புவித்தலில், ரக்சன், 2ம் இடம்.இரண்டாம் வகுப்பு மாணவர் சத்யதேவ், வண்ணம் தீட்டுதலில் முதலிடம்; இரண்டாம் வகுப்பு மாணவி விண்மிதா, ஆங்கில பாடல் ஒப்புவித்தலில், முதலிடம்; மூன்றாம் வகுப்பு மாணவர் முகமது ஷாகிர், மெல்லிசை தனிப்பாடலில் முதலிடம்; மூன்றாம் வகுப்பு மாணவர் கிளாட்வின்கிங் சற்குரு, தேசபக்தி பாடலில் முதலிடம்; மூன்றாம் வகுப்பு மாணவர் அகிலன், மாறு-வேட போட்டியில் முதலிடம்.நான்காம் வகுப்பு மாணவி அஸ்மா, பேச்சு போட்டியில், 3ம் இடம்; திருக்குறள் ஒப்புவித்தலில், 4ம் நான்காம் வகுப்பு மாணவர் சந்தோஷ், 2ம் இடம்; நாட்டுப்புற பாடல், நடனத்தில் குழு போட்டியில் அஸ்மா, அப்ஷின் பாத்திமா, கனிஷ்கா, ஓவியா, பவுசிகா, ஈவாபிரின்சி, வஸ்பியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். குறுவள மைய போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர் வட்டார அளவிலான போட்டியில் பங்கேற்-கின்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்கள் புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி, கவிதா, ரொகையா பீவி ஆகியோரையும், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி (பொ), தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உள்-ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை