உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் நகருக்குள் புகுந்த ராணுவ வாகனங்கள்

கரூர் நகருக்குள் புகுந்த ராணுவ வாகனங்கள்

கரூர்: கரூர் நகருக்குள் திடீரென புகுந்த, ராணுவ வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து, 40க்கும் மேற்பட்ட ராணுவ லாரிகள், வேன்கள் மற்றும் கார்கள் நேற்று மதியம், 12:30 மணிக்கு கரூர் நகரப்பகுதி வழியாக திருச்சிக்கு சென்றன. அதில், 250க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சீருடையில் இருந்தனர். வரிசையாக ராணுவ வாகனங்கள் வந்ததால், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராணுவ வாகனங்கள் சென்றதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.இதையடுத்து, பாதுகாப்புக்கு நின்றிருந்த போக்குவரத்து போலீசார், மற்ற வாகனங்களை சற்று நேரம் நிறுத்தி விட்டு, ராணுவ வாகனங்களை வரிசையாக செல்ல அனுமதித்தனர். இதனால், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி