உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 6 அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி

6 அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி

6 அரசு பள்ளிகளில்கலைத்திருவிழா போட்டிநாமக்கல், அக். 24-நாமக்கல் வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிப்பாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, மரூர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி, நேற்று நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி துவக்கி வைத்தார்.அதில், ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆத்திச்சூடி ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டுதல், கதை கூறும் போட்டிகள் நடந்தன. 3 முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் போன்ற போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை