மேலும் செய்திகள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
09-Dec-2024
கரூர்: கரூரில், தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் பசுவை பாரதி தலைமையில் நேற்று நடந்தது.அதில், சென்னையில் வரும் ஜன., 6ல் நடைபெற உள்ள, அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணியில், கரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான், தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் சசிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
09-Dec-2024