உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்னையில் ஜன., 6ல் அருந்ததியர் பாதுகாப்பு பேரணி: அதியமான்

சென்னையில் ஜன., 6ல் அருந்ததியர் பாதுகாப்பு பேரணி: அதியமான்

கரூர்: ''சென்னையில் ஜன., 6ல், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடக்கிறது,'' என, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் தெரிவித்தார்.கரூரில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்துக்கு, 2009ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி, ௩ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினார். அதை எதிர்த்து பலர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆக., 1ல், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால், தீர்ப்பை நிறுத்தி வைக்ககோரி, வி.சி.க., தலைவர் திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளார். உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் கூறுகிறார்.தமிழகத்தில், அருந்ததியர் மூன்று பேர் தான் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். 39 எம்.பி.,க்களில் ஒருவர் கூட அருந்ததியர் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை பெயரை நீக்கி விட்டு, பட்டியல் ஜாதியில் உள்ள, 73 பெயரில் ஏதாவது ஒன்றை பொதுவான பெயராக வைக்க வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் அருந்ததியர் சமூகத்துக்கு, உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். திராவிட மாடல், திராவிடம் என்பதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. அதே சமயம், எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன., 6ல், சென்னையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி