உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு பெயரை மாற்றுவதற்காக கையெழுத்து பெற்றவர் மீது தாக்கு

தெரு பெயரை மாற்றுவதற்காக கையெழுத்து பெற்றவர் மீது தாக்கு

குளித்தலை: குளித்தலை அடுத்த கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு, 46, விவசாய தொழிலாளி. தனது கிராமத்தில் உள்ள தெருவிற்கு, பெயர் மாற்றம் சம்பந்தமாக நேரு நகர் என பெயர் வைப்பதற்காக பொதுமக்களிடம் கடந்த, 1ம் தேதி காலை கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அதே ஊரை சேர்ந்த பொன்னன் மகன் மகாமுனி, 41, ராமலிங்கம், 50, இவர்களது உற-வினர் மாயவன், 22, ஆகிய மூவரும் தகாத வார்த்-தைகளால் பேசி கையால் அடித்தனர். இதில் பாதிக்கப்பட்ட வடிவேலுவை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வடிவேல் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மகாமுனி உள்பட மூன்று மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை