உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசின் துணி நுால் துறை சார்பில், தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த விழிப்-புணர்வு கூட்டம் நடந்தது.துணிநுால் துறை துணை இயக்குனர் (தொழில்-நுட்பம்) சக்தி விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரசு சார்பில், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தொழில்-நுட்ப ஜவுளிகளின் முதலீட்டு வாய்ப்புகள், வளர்ந்து வரும் தயாரிப்பு வகைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கரூர் மாவட்ட, ஜவுளி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் தொழில்முனை-வோர்களுக்கு, உயர் மதிப்பு கொண்ட தொழில்-நுட்ப ஜவுளித்துறை குறித்து ஆலோசனை அளிக்-கப்பட்டது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஆலோ-சனை நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜவுளிகளில் முதலீடு, திட்டமிடல், இயந்திரத் தேர்வு, சந்தை வாய்ப்புகள் குறித்து தேவையான வழிகாட்டல்-களை வழங்கினர். கூட்டத்தில், துணிநுால் துறை இணை இயக்-குனர் ராகவன், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை