உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

குளித்தலை:குளித்தலை அடுத்த, மணத்தட்டை பஞ்., எழுநுாற்றுமங்கலத்தில் பகவதி அம்மன், காளியம்மன் மற்றும் மலையாள கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.பழைய கோவிலை புனரமைப்பு செய்து, புதியதாக கோவில் கட்டுவது என விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் முடிவெடுத்தனர். பின்னர், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். கடந்த, 14ல் குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி செய்தனர்.நேற்று இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தை மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், வானில் கருட பகவான் வட்டமிட்டதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின் மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை