தமிழ் மொழி தேர்வில் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர் தேர்ச்சி
கரூர்: தமிழக அரசு நடத்தி வரும் தமிழ் மொழி தேர்வில், கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர், 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுகுறித்து, கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிர-மணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கடந்த, 2022 முதல், அனைத்து வகை பள்-ளிகளிலும், பிளஸ் 1 மாணவ, மாணவியர் பங்கு பெறும் தமிழ் மொழி, இலக்கிய திறனறிதல் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில், கரூர் பரணி பார்க் பள்ளி குழுமத்தின் மாணவ, மாண-வியர், 2022, 2023, 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில், 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவ, மாணவியர், 84 லட்-சத்து, 60 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் பரிசு தொகையாக பெற்றுள்ளனர். இதை தவிர, தமிழ் சங்க இலக்கியத்தின், 36 நுால்-களையும், தமிழ் எழுத்து வடிவில், கையெழுத்து பிரதி புத்தகங்க-ளாக, ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் தொகுத்துள்ளனர். கடந்தாண்டு அகில இந்திய அளவில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், பரணி வித்யாலயா மாணவர்கள், ஐந்து பேர் தமிழ் மொழியில், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளி முதல்வர்கள் சுதாதேவி, சேகர் ஆகி-யோருக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி குழும தாளாளர் மோகனசுந்தரம், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.