உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிப்., 23ல், பி.எச்.டி., நுழைவு தேர்வு பாரதிதாசன் பல்கலை கழகம் அழைப்பு

பிப்., 23ல், பி.எச்.டி., நுழைவு தேர்வு பாரதிதாசன் பல்கலை கழகம் அழைப்பு

கரூர், :திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் வரும் பிப்., மாதம் நடைபெற உள்ள, முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்.டி.,) தகுதி நுழைவு தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை கழக பதிவாளர் (பொ)காளிதாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில், பல்வேறு முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சேர விரும்பும், விண்ணப்பதாரர்களுக்கு பிப்., மற்றும் ஆக., மாதம் என, ஆண்டுக்கு இரண்டு முறை தகுதி நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தகுதி தேர்வு பிப்., 23ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வதற்கான தகுதி, பாட திட்டம் மற்றும் தேர்வு வழிகாட்டுதல் குறித்து கூடுதல் விபரங்களை அறிய, பாரதிதாசன் பல்கலைகழக இணையதளமான www.bdu.ac.inமற்றும் பதிவு இணைப்பு: https://rsm.bdu.in/index.php/prephd/onlineApplication/homePage/home/2 ஐ பார்க்கலாம். பாரதிதாசன் பல்கலை கழகத்துடன், கல்வி பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல இந்த வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை