அரசு மருத்துவமனை முன் மாயமாகும் சைக்கிள்கள் கரூரில் பொது மக்கள் புலம்பல்
காந்தி கிராமம்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் நிறுத்தப்-படும் சைக்கிள்கள், காணாமல் போவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். கரூர் அருகே, காந்தி கிராமத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனை செயல்படுகிறது. அந்த மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், நோயாளிகளின் கார், இருசக்கர வாகனங்களை, தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வெளியே சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள், நோயா-ளிகள் உள்ளே செல்கின்றனர். இந்நிலையில்,கடந்த சில நாட்க-ளாக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் நிறுத்-தப்பட்ட, பலரது சைக்கிள்கள் காணாமல் போயுள்ளன. இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. இதனால், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு செல்கிறோம்.அதில், சைக்கிள்கள் மட்டும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காணாமல் போகிறது. டூவீலர்களில் அலாரம், சைடுலாக் உள்ளிட்ட வசதிகள் இருப்-பதால், சைக்கிள்களை குறிவைத்து திருடுகின்றனர். இதை, பசுப-திபாளையம் போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.