உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை மண்டல துணை தாசில்தாரின் பைக் திருட்டு

குளித்தலை மண்டல துணை தாசில்தாரின் பைக் திருட்டு

குளித்தலை, குளித்தலையில், துணை தாசில்தாரின் பைக் திருட்டு போனது.குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தாராக நீதிராஜன் பணியில் இருந்து வருகிறார். இவர், குளித்தலை ரயில்வே கேட் டைமண்ட் சிட்டியில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். கடந்த, 16ல் அலுவலக பணிக்கு சென்று விட்டு, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை வீட்டின் கீழ் நிறுத்திவிட்டு துாங்க சென்றார். மறுநாள் பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரியவந்தது.இதுகுறித்து, அருகில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதிகாலையில் இரண்டு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, எடுத்துச் செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து மண்டல துணை தாசில்தார் நீதிராஜன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ