உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. அதில், நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக, 44 லட்சத்து, 75 ஆயிரத்து, 291 ரூபாயும், 106 கிராம் தங்கம், 655 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, துணை ஆணையர் செந்தில் குமார், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை