மேலும் செய்திகள்
ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் சங்க ஆலோசனை கூட்டம்
09-Mar-2025
பா.ஜ., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்கரூர்:கரூர் மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.அதில், பா.ஜ., வின் ஸ்தாபன நாளை, கரூர் மாவட்டம் முழுவதும், கிளை வாரியாக சிற ப்பாக கொண்டாடுவது, வரும் ஏப்., 19ல் சேலம் மாவட்டம், ஓமலுாரில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ள, மாநாட்டில் பங்கேற்பது. வரும் சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா, மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணி, பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், பொருளாளர் குணசேகரன் உள்பட, பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
09-Mar-2025