உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., பிரமுகரின் திருமண மண்டபங்கள் அகற்றம்

பா.ஜ., பிரமுகரின் திருமண மண்டபங்கள் அகற்றம்

குளித்தலை; நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட பா.ஜ., பிரமுகரின் திருமண மண்டபங்கள் இடித்து அகற்றப்பட்டன. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அம்மா பூங்கா அருகில் மாயனுார் பஞ்., முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி; பா.ஜ., பிரமுகர். இவர், நீர்வளத்துறைக்கு சொந்தமான, 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, அதில் இரண்டு திருமண மண்டபங்களை கட்டினார். ஆக்கிரமிபை அகற்றக்கோரி, நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்தனர். கற்பகவல்லி ரகுபதி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில், 'ஆக்கிரமிப்பாளர், 45 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றி கொள்ள வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். அகற்றிக்கொள்ள முன்வராததை அடுத்து, 46வது நாளான நேற்று முன்தினம் காலை, நீர்வளத்துறை அதிகாரிகள், தாசில்தார் பிரபாகரன் மேற்பார்வையில், இரண்டு திருமண மண்டபங்கள் அகற்றப்பட்டன. இதில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி