உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்னையில் கருந்தலை புழுக்கள்: ஆர்.டி.ஓ., ஆய்வு

தென்னையில் கருந்தலை புழுக்கள்: ஆர்.டி.ஓ., ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை மரங்களில், கருந்தலை புழுக்கள் பாதிப்பு உள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், புகழூர், மூலிமங்கலம் பகுதிகளில் கருந்தலை புழுக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், வெட்டப்பட்ட தென்னங்கீற்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பிறகு, கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்த, விவசாய துறை அதிகாரிகள் கூறும், வழி முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, விவசாயிகளை ஆர்.டி.ஓ., முகமது பைசல் அறிவுரை வழங்கினார். புகழூர் தாசில்தார் தனசேகரன் மற்றும் விவசாய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி