கடவூர் தாலுகா அலுவலகத்தில் ஆக.,18ல் பொலிரோ ஜீப் ஏலம்
கரூர், கடவூர் தாலுகா அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த வாகனங்களின் ஏலம், 18ம் தேதி நடக்கிறது.கடவூர் தாலுகா அலுவலகத்தில், பயன்படுத்தி வந்த வாகனம் (மஹிந்திரா பொலிரோ ஜீப்) வரும், 18, காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், அன்று காலை 10:00 முதல் 11:00 மணி வரை வாகனத்திற்கு, 2,000 ரூபாய்- முன்வைப்பு தொகையினை செலுத்தி, ஏலம் எடுக்க தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை உடனே செலுத்திட வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவோர் வரும், 10 காலை 10:00 மணி முதல் ஏலம் நடக்கும் நேரம் வரை வாகனத்தை, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பார்வையிடலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.